கிறிஸ்துவின் அருள் வேட்டல் – திரு.வி.க அவர்கள் காட்டும் கிறிஸ்து பெருமான் – ஆன்மிக சிந்தனைகள்
Introduction to the author:
The following lines are extracts from my Thesis I have submitted to Tamilnadu Theological Seminary for the award of Postgraduate Diploma in Theology. In my opinion this thesis though had been accepted for the award, did not receive any encouragement for sharing and for further research about Thiru.Vi.Ka and his contribution to Christian thought. His contributions are significant for the fact it was from a Hindu Scholar and the thoughts developed by him were original and was constructed from the Indian religious experience. Therefore, I thought I should share this with a larger reader group for their further reflection and spiritual growth. I am planning to share only the most important aspects of his thoughts as laid down in this small devotional book in Tamil. hope this brief introduction will be helpful to those who have not heard of him at all, or had had only very few informations about him. The rest will follow.
Introduction:
Thiruvarur V. Kalayanasundaran popularly known as Thiru.Vi.Ka who lived in the later part of the twentieth century was an outstanding Tamil scholar and a religious thinker. He needs no introduction to the Tamil world due to his significant contributions to social and religious thoughts and labour movements in Tamilnadu. In the book “Saivathin Samarasam” the publishers quote from Kundrakudi Adigalar’s testimony about Thiru.Vi.Ka as follows: “Thiru.Vi.Ka is a breeze in the language style, in the literary world he is mount Everest, he is a labourer among the labourers, in the world of monks he is a monk, in the world of wealthy people he is a poor man…….because of Thiru.Vi.Ka the difficult poetry style disappeared and simple literary style emerged, stories disappeared and messages emerged…”[1] This is just one among the several testimonies to recognize the greatness of Thiru.Vi.Ka. Among his published work on religious thought “Khristuvin Arul Vettal” (The yearning for Christ’s Grace) is an insightful collection of devotional verses on Jesus Christ in Tamil. Thiru.Vi.Ka’s understanding of the message of Christ is well reflected in this small devotional book. In addition one can find his devotion to Christ and the impact of Christ’s message on his life and work in his other writings too including his autobiography.
In his foreword to this book A.C. Paul writes, “This booklet may be taken as the reaction of one of the most cultured minds in South India to the Challenge of Jesus Christ. In the concluding paragraph he says, “I may say that this publication is a distinct contribution to Christian thought in Tamil. As a book of devotion in verse, it takes it rank with those of Vedanayaka Sastriar, Vedanayagam Pillai and Krishna Pillai. It has a distinct advantage over the others in that it deals with the deeper problems of life along with the living questions of the day and finds a solution for them in Christ.”[2] Thiru.Vi.Ka’s understanding of the message of Christ has great relevance to the emerging pluralistic context of to-day.
It is sad to note that the Christian world has known very little about his thoughts on Christianity and the message of Christ. It is more surprising to note that even in Theological circles that give importance to an indigenous theology, it appears, have given almost no thought to Thiru.Vi.Ka’s writing about Christ. There appears to be no significant work on his thoughts on Jesus Christ. This thesis is an attempt to elucidate his understanding of Christ’s message and its relevance to the religious pluralism.
[1] Saivathin samarasam, publisher’s note
[2] Khristuvin Arul vettal-foreword by A.C. Paul. 3. P.D. Devanandan, Volume I edited by Joachim Wietzke P.64
———————————————————————————————————————————–1. section 6 of the book: உலகெலாம்
உலகெலாம் உய்ய வேண்டி உருக்கொடு மண்ணில் வந்தாய்
நலமிகு உவமை யாலே ஞானசீ லங்கள் சொற்றாய்
கலகமுங் கரவுங் கொண்ட கண்ணிலாப் பேய்யைச் சாய்த்தாய்
அகிலா ஒளியே! ஏசு ஐயனே! போற்றி போற்றி
விளக்க உரை:
(யான் தமிழ் அறிஞனும் அல்ல தமிழ் இலக்கியம் படித்தவனும் அல்ல. தெய்வ மொழியாம் தமிழ்பால் உள்ள பற்றால் விளக்கம் தர முயன்றுள்ளேன். பிழை இருப்பின் பொறுத்தருள்க. பிழையை சுட்டிக்காட்டின் திருத்திக்கொள்வேன். கிருத்துவின் பால் உள்ள பற்றால் விளக்க துணிந்தேன்.)
கிறிஸ்து பெருமான் உலகம் உய்ய வேண்டி மானிட உருவில் உலகில் வந்தார் என்கிறார். உலகம் உய்ய வேண்டி என்கிறார். உலகம் பிழைக்கமாறு அல்லது வாழ்தல் வேண்டி என்று பொருள். நலம் தரும் உவமைகள் மூலம் மெய்பொருள் பற்றிய செயதியை சொன்னாய். பேயின்(பிசாசு) செயல்களை ஒழித்தார். கரவு என்ற வார்த்தைக்கு, வன்சனை, களவு, பொய் மற்றும் (மனதில்) மறைத்து வைத்திருக்கும் பழி வாங்கும் எண்ணம் என்று பொருள் படுகிறுது. இத்தகைய பேயை வீழ்த்தினார் என்று பொருள் படும். கண்ணிலாப்பேய் என்ற சொல் தீய குணமுடையோன், அல்லது the தீயோன் என்ற பொருள் (the evil one, the one who was responsible for the humanity’s sin) கண் தெரியாத பேய் என்று நினைக்கக்கூடாது.
அகிலா ஒளி – கிறிஸ்து ஒளியாக உலகிற்கு வந்தார். கிறிஸ்து பெருமானை அகிலா ஒளி என்கிறார். அகிலாண்டம் என்ற தமிழ் சொல் மூலம். இதன் பொருள்; சருவ லோகம், அண்டம், எல்லா உலகம் என்று பொருள். தமிழ் சமய நூல்கள் பார்வதியை அகிலாண்டநாயகி என்றும், உமாதேவி, மற்றும் பார்வதியை அகிலாண்டவல்லி என்றும் சொல்கின்றன. இயேசு பெருமான் அகில உலகிற்கு மட்டுமல்ல எல்லா உலகிற்கும் ஒளியாக வந்தார் என்று பொருள்.
லுக்கா 2: 30-32 வசனங்களில் சிமியோனின் பாசுரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வசனம் 30 ; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளி என்றும், சகல ஜாதிகளுக்கும் முன்பாக (அகிலாண்டம்) ஆயித்தம்பண்ணின…..என்ற சத்தியம் சொல்லப்படுகிறது. இதையே திரு.வி.க. அவர்கள் ‘அகிலா ஒளியே’ என்கிறார் என்பதில் ஐயம் இல்லை.
உவமைகள் மூலமாக ஆண்டவர் உணர்த்திய ஆன்மீக செய்திகளும் சிறப்பித்து காட்டப்படுகிறது.
ஒரு சைவசமய ஞானி, சமய பரப்புரையாளர் கடவுள் கிறிஸ்துவில் மனிதனாக வந்தார் என்பதையும், இவர் பேயை சாய்த்தவர் என்றும் உல ஒளிஎன்றும் சொல்கிறார் என்பது மிகவும் கவனதிற்குரியது. கிறஸ்துவர்களில் பெரும்பான்மையானோர்க்கு இந்த ஆன்மீக தெளிவு இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.
சைவ சமைய கொள்கை எத்தகையது என்பதை நம் புரிதலுக்காக கீழே தருகிறேன்:
திரு.வி.க அவர்கள் சைவ சமைய அறிஞர், வைஷ்ணவர் அல்லர். சைவ சமையம் அவதார கொள்கைக்கு உடன்பட்டதில்லை. ஆனால் இந்த பாடலில் திரு.வி.க. அவர்கள் கிறிஸ்து பெருமான் மனித உருவெடுத்தார் என்பதை உறுதிப் படுத்துகிறார். இப்பாடலின் முதல் வரியில் இதை உறுதிப்படுத்துகிறார். வைஷ்ணவதிற்கும், சைவ சமயத்திற்கும் உள்ள பெரிதான வேறுபாடு அவதாரக்கொள்கை பற்றியது. யூத மதமும் இஸ்லாம் மதமும்கூட அவதரக்கொள்கையை ஏற்றுக்கொள்வதில்லை. எனவேதான் கிறிஸ்து பெருமானை இவ்விரு சமயங்களும் கிறிஸ்து பெருமானின் கடவுள் நிலையை மறுக்கின்றன. சைவத்தின் முழுமுதல் கடவுளான சிவபெருமான் தோற்றமளிப்பார் ஆனால் மனிதனாக உலகில் பிறப்பதில்லை. இந்த சமைய கொள்ககைக்கு ஆதாரமாக சமயக்குரவர்களின் பாடல் வரிகள் காணப்படுகிறது;
“பிறவா நெறியானே” (oh! Lord, of Birthless Nature), “மூவாய் பிறவாய் இறவாய் போற்றி” (obeisance to Thee that agest not nor art born nor diest) என்று தேவாரமும்,
“யாவர்க்கும் தந்தைதாய் தம்பிரான் தனக்கஃதிலான்” (Father, mother and Lord of all, but to himself has no father or mother or Lord)
“போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியன்” (The Blessed One that does not pass away nor comes into being nor changes)
என்று திருவசகமமும் சொல்லுகிறது (quotes are taken from the Book ‘Elements of Saiva Siddhantam’ by A. Viswanathapillai)
Dear Pastor,
Thanks a lot for the helpful and insightful post. This is an eye-opener and thanks a lot for sharing!
In Christ,
Paul
Thank you, brother.